63 கிலோ கஞ்சா பார்சல் தனுஷ்கோடியில் பறிமுதல்
ராமேஸ்வரம்:தனுஷ்கோடி இரண்டாம் மணல் தீடையில் ஒதுங்கிய 63 கிலோ கஞ்சா பார்சல்களை, கடலோர காவல் படை வீரர்கள், கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து, 3 கி.மீ.,யில் உள்ள இரண்டாம் மணல் தீடையில் நேற்று சில பார்சல்கள் ஒதுங்கிக் கிடந்தன. இப்பகுதியில், 'ஹோவர் கிராப்ட்' கப்பலில் ரோந்து சென்ற இந்திய கடலோர காவல் படை வீரர்கள், 13 பார்சலை பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அவற்றில் 53 கிலோ கஞ்சா இருந்தது.அதை மண்டபம் கடலோர காவல் படை நிலையத்திற்கு எடுத்துச் சென்று சுங்கத் துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் ஒதுங்கிய ஐந்து பார்சல்களையும் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அதில், 10 கிலோ கஞ்சா இருந்தது.மொத்தம், 36 கிலோ கஞ்சாவின் மதிப்பு 7.20 லட்சம் ரூபாய். கஞ்சா பார்சல்களை பாம்பன், மண்டபம் கடற்கரையில் இருந்து கடத்தல்காரர்கள் கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தி சென்றபோது, இந்திய ரோந்து கப்பலை கண்டதும் கடலில் வீசி தப்பி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.