மேலும் செய்திகள்
இலங்கை கடற்படையினரால் 8 மண்டபம் மீனவர்கள் கைது
09-Dec-2024
ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் விசைப்படகு சூறாவளியில் சிக்கி கடலுக்குள் மூழ்கியது. இப்படகில் இருந்த 7 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.டிச., 14 ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் மணிவண்ணன் என்பவரது விசைப்படகு 3 கடல் மைல் (5 கி.மீ.,) துாரம் சென்ற போது சூறாவளி வீசியதால் கடல் கொந்தளிப்பில் ராட்சத அலைகள் எழுந்தன. இதில் இப்படகின் அடிப்பகுதியில் மரப்பலகை உடைந்து கடல்நீர் புகுந்ததால் படகு கடலுக்குள் மூழ்க துவங்கியது.அதில் பயணித்த மீனவர்கள் ஆறுமுகம் 45, குமார் 50, முருகன் 48, சேதுபதி 45, மாதவன் 40, கண்ணன் 37, ஜஸ்டின் 55, ஆகியோர் பரிதவித்த நிலையில் அவ்வழியாக மீன்பிடித்து வந்த மற்றொரு படகின் மீனவர்கள், உயிருக்கு போராடிய 7 மீனவர்களை மீட்டு ராமேஸ்வரம் கரைக்கு கொண்டு வந்தனர். மூழ்கிய படகை மீட்க ஓரிரு நாளில் மீன்வளத்துறை அனுமதியுடன் மீட்பு படகில் மீனவர்கள் செல்ல உள்ளனர்.
09-Dec-2024