பள்ளி மாணவர்கள் 70 பேர் உயர்கல்வியில் சேர்க்கை
ராமநாதபுரம்: உயர்கல்வி பெறுபவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 120 மனுக்கள் பெறப்பட்டு 70 மாணவர்கள் உடனடியாக உயர்கல்வியில் சேர்க்கப்பட்டனர்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் பள்ளிகல்வித் துறை சார்பில் உயர்கல்வி பெறுபவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து உயர்கல்வி பெறுவதன் அவசியம் குறித்துப் பேசினார். மாணவர்கள், பெற்றோர்களிடம் கோரிக்கைகள் தொடர்பான 120 மனுக்கள் பெறப்பட்டன. அதில் தொடர்ந்து உயர்கல்வி படிப்பை தொடர ஐ.டி.ஐ., கல்லுாரிகளில் சேர்ந்துள்ள 70 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை கலெக்டர் வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர்ஜேன் கிறிஸ்டிபாய், மாவட்ட கல்வி அலுவலர்கள் தொடக்க கல்வி சேதுராமன், மெட்ரிக் பள்ளிகள் ரவி, இடைநிலை கல்வி கனகமணி பங்கேற்றனர்.