முத்துமாரியம்மன் கோயிலில் 73ம் ஆண்டு உற்ஸவ விழா
கீழக்கரை : கீழக்கரை தட்டாந்தோப்பு தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 73ம் ஆண்டு உற்ஸவ விழா நடந்தது. செப்.,9ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு நாராயண சுவாமி கோயிலில் இருந்து பால்குடம் உள்ளிட்டவைகளை நேர்த்திக்கடன் பக்தர்கள் எடுத்து முத்து மாரியம்மன் கோயிலை வந்தடைந்தனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு 7:00 மணிக்கு முத்து மாரியம்மன் கோயிலில் இருந்து சக்தி கரகம் நகர் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் மற்றும் மேலக்கொடிக்கால் நாடார் உறவின்முறையினர் செய்திருந்தனர்.