திறக்கப்பட்ட நாளிலிருந்து பூட்டி கிடக்கும் நுாலகம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் போலீஸ் ஸ்டேஷன் அருகே புதிதாக நுாலகம் கட்டி முடிக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை மூடி கிடக்கிறது.முதுகுளத்துார் பேரூராட்சி சார்பில் போலீஸ் ஸ்டேஷன் அருகே ரூ.22 லட்சத்தில் முழு நேர கிளை நுாலகத்திற்கு புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தது. இதன் திறப்பு விழா ஜூன் 10ல் நடந்தது. சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் கட்டடத்தை திறந்து வைத்தார்.பின் முதுகுளத்துாரில் மாவட்ட நுாலக அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட முழுநேர கிளை நுாலகம் திறக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை பூட்டப்பட்டுள்ளது.இதனால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது.எனவே நுாலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.