உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேவிபட்டினம் சக்கரத்தீர்த்த குளத்தில் மூழ்கி சிறுமி பலி

தேவிபட்டினம் சக்கரத்தீர்த்த குளத்தில் மூழ்கி சிறுமி பலி

தேவிபட்டினம் : தேவிபட்டினம் வடக்கு தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மகள் தேவகீர்த்திகா 7. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய நிலையில், சிறுமியை காணவில்லை. உறவினர்கள் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலையில் தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரை எதிரே உள்ள, சக்கர தீர்த்த குளத்தில் சிறுமி இறந்து மிதந்தார். சிறுமியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராமநாத புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தேவிபட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை