உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் மரங்களை காக்கும் காவலர்

ராமநாதபுரத்தில் மரங்களை காக்கும் காவலர்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் ரோட்டோரம் உள்ள மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றி மரங்களை காக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ராமநாதபுரம் பகுதியில் ரோட்டோரம் உள்ள மரங்களில் தனியார் நிறுவனங்களின் விளம்பர போர்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் பலர் மரத்தில் பெரிய ஆணிகளை அடித்து விளம்பர போர்டுகளை பதிக்கின்றனர். இதே போன்று மரங்களில் அடிக்கப்பட்ட விளம்பர போர்டுகளை அகற்றும் பணியை சேவையாக செய்து வருகிறார் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன். அவர் கூறியதாவது: மரங்களின் மீது ஆணி அடிக்கும் போது அதன் பட்டை கிழிந்து காயம் உண்டாகிறது. காயம் வழியாக பூஞ்சை, பாக்டீரியா உள்ளிட்டவை உட்புகுந்து நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மரத்தின் உள்பட்டை வழியாக தான் தனக்கு தேவையான சத்துக்களை மரங்கள் கடத்துகின்றன. பல இடங்களில் ஆணி அடிக்கும் போது உள்பட்டை சேதமாகி மரம் நாளைடைவில் பலவீனமடையும். கடந்த ஒர் ஆண்டுக்கு முன்பு தீவிர முயற்சியாக மரங்களில் உள்ள போர்டுகளையும், ஆணிகளையும் அகற்றினோம். அதன் பின் மரங்களில் விளம்பர போர்டுகள் அடிப்பது குறைந்தது. இந்நிலையில் சமீப நாட்களாக மீண்டும் மரங்களில் விளம்பர போர்டுகள் வைப்பது அதிகரித்துள்ளது. அவை அனைத்தையும் அகற்றும் பணியை தற்போது தொடங்கி யுள்ளேன். மரத்திற்கு நோய் தாக்குதல் பரவாமல் இருக்க ஆணியை எடுத்த பின் மஞ்சள், வேப்பநார் தேய்த்து வருகிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி