மழையால் நிரம்பும் இதம்பாடல் கண்மாய்
சிக்கல்: மழையால் சிக்கல் அருகே இதம்பாடல் கண்மாயில் நீர்மட்டம் உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிக்கல் அருகே இதம்பாடல் கண்மாய் நீர்பாசனத்தில் நெல், மிளகாய், 2ம் கட்டமாக பருத்தி உள்ளிட்ட விவசாயப்பணிகள் நடக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் இதம்பாடல் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பத் துவங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் சில நாட்களில் நிரம்பி விடும். இதனால் அப்பகுதியில் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாண்டு 2ம் போக சாகுபடிக்கு உரிய தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.