உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின்னல் தாக்கியதில் தீப்பிடித்த பனைமரம்

மின்னல் தாக்கியதில் தீப்பிடித்த பனைமரம்

கமுதி: கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் பனைமரம் தீப்பிடித்து எரிந்தது.கமுதி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக இருந்தது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் சிரமப்பட்டனர். நேற்று கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வானம் மேகமூட்டத்துடன் ஒருசில கிராமங்களில் மழை பெய்தது. வெயில் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்நிலையில் கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் விவசாய நிலத்தில் இருந்த பனைமரம் தீப்பிடித்து எரிந்தது. அப்போது அருகில் யாரும் இல்லாததால் எதுவும் விபத்து ஏற்படவில்லை. மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ