உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலரில் சென்றவர் மாடு மோதி பலி

டூவீலரில் சென்றவர் மாடு மோதி பலி

தொண்டி : டூவீலரில் சென்றவர் ரோட்டில் படுத்திருந்த மாடு மீது மோதியதில் கீழே விழுந்து பலியானார். நாகூர் புதுமனை தெருவை சேர்ந்தவர் முகமது தாகா மரைக்காயர் 49. ராமநாதபுரத்தில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக டூவீலரில் டிச.16 ல் சென்றார். கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி அருகே நம்புதாளை சென்ற போது ரோட்டில் படுத்திருந்த மாடு மீது மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்தவர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் நேற்று இறந்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை