உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கண்மாயில் சிக்கிய வாலிபர் மீட்பு

 கண்மாயில் சிக்கிய வாலிபர் மீட்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே பறவையை பிடிக்கச்சென்று கண்மாய்க்குள் சிக்கியவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். எட்டிவயல் அருகே ஆனைகுடி பகுதியைச் சேர்ந்த குமரன் மகன் சந்துரு 20. இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள கண்மாயில் திரியும் முக்குளிப்பான் பறவைகளை பிடிக்க சென்றுள்ளார். கண்மாயின் நடுப்பகுதி வரை சென்றவரால் மீண்டும் கரைக்கு திரும்பி நீந்தி வர முடியாமல் அங்குள்ள மரத்தின் மீது அமர்ந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்வர்கள் வாலிபர் கண்மாய் நடுவில் இருப்பதை கண்டு தீயணைப்பு துறையினரிடம் தெரிவித்தனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் நீந்திச் சென்று வாலிபரை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இதுபோன்று பறவையை பிடிக்க கண்மாய்க்குள் இனி செல்லக் கூடாது எனவும் அவரை எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ