உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானையில் ஆதார் சேவை துவங்கியது

திருவாடானையில் ஆதார் சேவை துவங்கியது

திருவாடானை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக 12 நாட்களாக முடங்கிய ஆதார் சேவை தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக நேற்று மாலை 3:00 மணி முதல் சீரானது.திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் சேவை மையம் உள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் இயங்கும் இந்த இ--சேவை மையத்தில் தினமும் நிறைய பேர் சென்று பெயர், பிறந்த தேதி, அலைபேசி எண், பெற்றோர் பெயரில் திருத்தம், முகவரி மாற்றங்கள் மற்றும் பல்வேறு திருத்தம் தொடர்பாக வந்து செல்கின்றனர்.தொழில் நுட்ப கோளாறு காரணமாக நேற்று முன்தினத்துடன் 12 வது நாளாக முடங்கியது. இதனால் திருவாடானையிலிருந்து நீண்ட தொலைவில் உள்ள எஸ்.பி.பட்டினம், தொண்டி, மங்களக்குடி, முள்ளிமுனை, காரங்காடு பகுதியிலிருந்து வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.தொழில் நுட்ப கோளாறை சரி செய்ய வேண்டும் என தினமலர்நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று மாலை 3:00 மணி முதல் சேவை துவங்கியது. பொதுமக்கள் ஆதார் திருத்தம் தொடர்பாக பயன்பெறலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ