ஆடி பிரம்மோற்ஸவம் -நாளை கருட சேவை
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் நாளை பெரிய திருவடியான கருட சேவையில் அருள்பாலிப்பார். பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. நேற்று காலை வஜ்ர கவச அலங்காரத்தில் பெருமாள் உலா வந்தார். இரவு சிம்ம வாகனத்தில் அலங்காரமாகி வீதி வலம் வந்தார். இன்று சேஷ வாகனத்திலும், நாளை இரவு பெரிய திருவடியான கருட வாகனத்திலும் எழுந்தருளுவார். தேரோட்டம் ஆக.,9 காலை 11:00 மணிக்கு நடக்கிறது. தினமும் வேதபராயணம், பாகவதர் கோஷ்டியினர் பெருமாள் கீர்த்தனைகளை பாடியபடி செல்கின்றனர். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.