உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்து

ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்து

திருவாடானை: தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. வாகனங்களில் செல்லும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். திருவாடானையில் கிராமங்களில் கால்நடைகள்வளர்ப்பவர்கள் அதிகமாக உள்ளனர். பால் கரக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் மாடுகள்அவிழ்த்து விடப்பட்டு சாலையில் திரிகின்றன. மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அதிகஅளவில் மாடுகள் உலா வருகின்றன. வாகனங்கள் செல்லும் போது திடீரென மிரண்டு ஓடும் மாடுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர். பாரதிநகர் அருகே இரு நாட்களுக்கு முன்பு தொண்டி, மணமேல்குடியை சேர்ந்த இருவர் மாடுகள் குறுக்கே சென்றதால் கீழே விழுந்து காயமடைந்தனர்.நேற்று காலையில் திருவாடானையை நோக்கி தனியார் பஸ் சென்றது. மாடுகள் மிரண்டு ஓடியதால் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது பின்னால் கோழிகள்ஏற்றி சென்ற சரக்கு வாகனம் அந்த பஸ்சின் பின்புறம் மோதியதில் சேதமடைந்தது. இதில் டிரைவர் விக்னேஷ் 24, காயம்அடைந்தார். பாரதிநகர் மக்கள் கூறுகையில், ரோட்டில் திரியும் மாடுகளால் தினமும் விபத்துகள் நடந்து காயமடைவது வழக்கமாக உள்ளது. மாட்டு உரிமையாளர்கள் மாடுகளை பாதுகாப்புடன்வளர்க்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை