உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டியில் அதிக வேகத்தில் செல்லும் டூவீலர்களால் விபத்து

தொண்டியில் அதிக வேகத்தில் செல்லும் டூவீலர்களால் விபத்து

தொண்டி : திருவாடானை, தொண்டி ஆகிய இடங்களில் டூவீலரில் சில வாலிபவர்கள், சிறுவர்கள் அதிக வேகத்தில் செல்வதால் விபத்துகள் அதிகரித்துள்ளது. திருவாடானை, தொண்டியில் வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் மூன்று அல்லது நான்கு பேர் வரை ஒரே வாகனத்தில் அதிக வேகத்தில் செல்கின்றனர். இதனால் விபத்துகளில் சிக்கி காயமடைந்தல், உயிரிழப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஆக.20ல் தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் டூவீலரில் சென்ற ஒரு ஆசிரியர் மீது மூன்று வாலிபர்கள் ஒரே டூவீலரில் வேகமாக சென்று மோதினர். இதில் அந்த ஆசிரியர் பலியானார். சில டூவீலர்களில் வித்தியாசமான ஒலி எழுப்புவதால் மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிலர் டூவீலர்களில் சாகசம் செய்கின்றனர். பொறுப்பில்லாமல் டூவீலர் ஓட்டும் வாலிபர்கள் மற்றும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டி-நம்புதாளை ரோட்டில் பள்ளி அருகே வேகத்தை தடுக்கும் வகையில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை