மேலும் செய்திகள்
மனிதநேய வார நிறைவு விழா
31-Jan-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மதக்கலவரத்தை துாண்டும் வகையில் நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வடக்கே உள்ள மாதவாதக் கும்பல் துாண்டுதலின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹிந்து, முஸ்லிம் மக்களிடம் மதக்கலவரத்தை துாண்ட முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் எந்தவித சர்ச்சையும் இன்றி வழிபடுகின்றனர்.இதற்கு எதிராக இளைஞர்கள் மனதில் சிலர் நஞ்சை விதைக்கின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
31-Jan-2025