உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தடையை மீறி கடலுக்கு சென்றால் நடவடிக்கை

தடையை மீறி கடலுக்கு சென்றால் நடவடிக்கை

தொண்டி: தேவிபட்டினம், தொண்டி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 16ல் கடலுக்கு செல்ல வேண்டும் என்று கடலோர கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிலையில் தடையை மீறி முன்கூட்டியே சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் (வடக்கு) ஆற்றங்கரை முதல் தேவிபட்டினம் வரை 77 விசைப்படகுள் உள்ளன. மீன் இனபெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் தடைகாலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும் மரைன் போலீசார் கூறியதாவது:ஜூன் 14 நள்ளிரவு வரை தடைகாலம் உள்ளது. ஜூன் 15 ல் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்படும். மறுநாள் கடலுக்கு செல்ல வேண்டும் என கடலோர கிராமங்களில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செல்லும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை