உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முள்ளிமுனைக்கு கூடுதல் பஸ் கட்டணம்

முள்ளிமுனைக்கு கூடுதல் பஸ் கட்டணம்

தொண்டி; தொண்டி அருகே உள்ளது முள்ளிமுனை. கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள இக்கிராமத்திற்கு தொண்டியிலிருந்து மதியம் 12:00 மணிக்கு ராமநாதபுரம் செல்லும் அரசு போக்குவரத்து பஸ் மணக்குடி விலக்கில் இருந்து 2 கி.மீ.,ல் முள்ளிமுனைக்கு சென்று விட்டு ராமநாதபுரம் செல்கிறது. முள்ளிமுனை பஸ் ஸ்டேஜ் இல்லாததால் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.கிராம மக்கள் கூறியதாவது: தொண்டியில் இருந்து முள்ளிமுனைக்கு ரூ.15 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. அதே பஸ்சில் மணக்குடியில் இருந்து 2 கி.மீ.,ல் உள்ள முள்ளிமுனைக்கு செல்ல ரூ.15 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. அரசு பஸ்களில் ரூ.10 வசூல் செய்யபடுகிறது என்றனர்.போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், ஒவ்வொரு குறிப்பிட்ட துாரத்திற்கும் ஒரு ஸ்டேஜ் என பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஸ்டேஜிற்கும் ஒரு கட்டணம் வசூலிக்கப்படும். முள்ளிமுனைக்கு உப்பூர் ஸ்டேஜ் கட்டணமாக ரூ.15 வசூல் செய்யப்படுகிறது என்றனர்.முள்ளிமுனையை தனி பஸ் ஸ்டேஜ் ஆக அறிவித்து குறைந்த கட்டணத்தை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ