உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

பரமக்குடியில் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

பரமக்குடி:பரமக்குடியில் செப்.,11ல் இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது. இதனை ஒட்டி சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் பரமக்குடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனம் நிறுத்தும் இடங்கள், போலீசாரின் கண்காணிப்பு வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ், ஏ.எஸ்.பி.,கள் மீரா (ராமேஸ்வரம்), குணால் உத்தம் ஷ்ரோதே (கீழக்கரை), பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் உள்ளிட்டோர் இருந்தனர். பரமக்குடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ௨ மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை செய்த பின் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றை ஏ.டி.ஜி.பி., பார்வையிட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !