மேலும் செய்திகள்
பாம்பளம்மன் கோயில் பொங்கல் விழா
30-Aug-2024
கமுதி,: கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் அடைக்கலம் காத்த அம்மன், சித்தி விநாயகர், தவசிகுறிச்சி அய்யனார், பசும்பொன் அய்யனார் கோயிலில் புரட்டாசிபொங்கல், முளைப்பாரி விழா நடந்தது.கடந்த ஒரு மாதமாக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். நேற்று பக்தர்கள் பால்குடம் , அக்னிசட்டி எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பொங்கல் வைத்து மக்கள் நேர்த்திகடன் செலுத்தினர். மூலவரான அடைக்கலம் காத்த அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உட்பட 21 வகை அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.முளைக்கொட்டு திண்ணையில் இருந்து ஊர்வலமாக கிராமத்தின் முக்கிய வீதிகளில் சக்தி கரகம், முளைப்பாரி துாக்கி சென்றனர். முளைப்பாரிகளை ஊருணியில் கரைத்தனர். விழாவில் கமுதி சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
30-Aug-2024