உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தவிப்பு

ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தவிப்பு

ராமநாதபுரம்: தமிழகத்தில் கல்வி பயிலும் ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெரும்பான்மையோருக்குஇதுவரை கிடைக்காததால் தவிப்பில் உள்ளனர்.தமிழக பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 3,4,5 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.500, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1000ம், ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500 ம் வழங்கப்படும். ஆதிதிராவிட மாணவர்கள் குறித்த அனைத்து விபரங்களும் பள்ளி நிர்வாகத்தினரால் எமிஸ் தளத்தில் வங்கி கணக்கு எண், ஆதார் எண் உட்பட அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில் 2024-2025 கல்வி ஆண்டில் 20 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 80 சதவீதம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்காததால் பள்ளி நிர்வாகத்தினரிடம் அதை கேட்டு பெற்றோர் தினமும் தகராறு செய்து வருகின்றனர். தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் இனியாவது நடவடிக்கை எடுத்து ஆதி திராவிட நலத்துறையின் மூலம் கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை