உள்ளூர் செய்திகள்

ஆதி ஈஸ்வரன் கோயில்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே செல்லுார் கிராமத்தில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதி ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.செல்லுார் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இடத்தை சுத்தம் செய்த போது சுவாமி சிலைகள் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. அதில் ஏழாம் நுாற்றாண்டை சேர்ந்த ஆதி ஈஸ்வரன் கோயில் எனவும் ஈஸ்வரன் சிலை, கணபதி, பாலமுருகன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சிலைகள் கிடைத்தன. இதையடுத்து கிராம மக்களின் முயற்சியால் அந்த இடத்தில் ஆதி ஈஸ்வரன் கோயில் புதிதாக கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் துவங்கி முதல் கால, இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து கடம் புறப்பட்டு பிறகு கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.பின்பு ஆதி ஈஸ்வரன், ஆதி ஈஸ்வரி, கணபதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்துார், பரமக்குடி அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி