மாணவர்கள் கற்றல் திறனை அதிகரிப்பதற்கு அறிவுரை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் குமார் அரசுப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களின் வாசிப்பு, எழுதுதல் திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குநர் குமார் நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி, பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்ன அக்கிரமேசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் தமிழ், ஆங்கில வாசித்தல் மற்றும் சொல்வதை எழுதுதல் திறனை ஆய்வு செய்தார்.தொருவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டின் தேர்ச்சி விகிதத்தை ஆய்வு செய்த இந்த கல்வி ஆண்டில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெறவும் இணை இயக்குநர் அறிவுரை வழங்கினார். அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பள்ளி வளாகத் துாய்மை, மாணவர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தி பேசினார்.முதன்னை கல்வி அலுவலர்(பொ) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) இடைநிலை அம்பேத்கர், உதவித்திட்ட அலுவலர் கணேசபாண்டியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், பரமக்குடி மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்ககல்வி) சேதுராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.