உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழை தீவிரமடைந்துள்ளதால் பள்ளிகளுக்கு அறிவுரை

மழை தீவிரமடைந்துள்ளதால் பள்ளிகளுக்கு அறிவுரை

திருவாடானை: பருவமழையின் போது அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து கல்வி அலுவலர்கள் கூறியதாவது: திருவாடானை தாலுகாவில் 79 அரசு தொடக்கபள்ளி, 19 நடுநிலைபள்ளி மற்றும் உயர்நிலை, மேல்நிலைபள்ளிகள் என மொத்தம் 144 பள்ளிகள் உள்ளன. பருவ மழையின்போது பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கபட்டுள்ளது. பள்ளிகளில் மின் இணைப்புகளை கண்காணிப்பது, வடிகால்களை சுத்தம் செய்வது, திறந்தவெளி கால்வாய்களை துார்வாரி மூடுதல், குழிகளை நிரப்புதல் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள், மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். கூரைகளில் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து, உடனடியாக அகற்ற வேண்டும். பழுதடைந்த கட்டடங்களை பயன்படுத்துவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குளங்களில் மாணவர்கள் சென்று குளிப்பதை தவிர்க்கவும், வெள்ள அபாயம் உள்ள நீர்நிலைகள் அருகே வேடிக்கை பார்க்க அனுமதிக்க கூடாது என்பதை பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும். மாணவர்கள் சைக்கிள்களில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுறுத்த வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை