உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பக்தர்களுக்கு ஆசி வழங்கிய அகோரி

பக்தர்களுக்கு ஆசி வழங்கிய அகோரி

திருவாடானை; காசியில் இருந்து வந்த அகோரி திரு வாடானையில் பக்தர் களுக்கு ஆசி வழங்கினார். காசியில் உள்ள பல ஆயிரம் அகோரிகள் நாடு முழுக்க ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் திருவாடானைக்கு வந்த ஒரு அகோரி மதுரை- தொண்டி ரோட்டில் நான்கு ரோடு சந்திப்பில் பக்தர்களை சந்தித்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அகோரி கூறியதாவது: தமிழகத்தில் உள்ள கோயில்கள் சிறப்பான முறையில் உள்ளன. மனதில் சுத்தம் இருந்தால் அனைத்தும் நலமாக இருக்கும். மனதில் நல்லெண்ணம் இல்லாவிட்டால் நல்லதே நடக்காது. ராமேஸ்வரம் சென்று மூன்று நாட்கள் தங்கி யிருந்து உலக நன்மைக்காக யாக பூஜை செய்ய உள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி