உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அக்னி தீர்த்தக் கரையில் கடல் புற்களால் துர்நாற்றம்

அக்னி தீர்த்தக் கரையில் கடல் புற்களால் துர்நாற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அக்னி தீர்த்தத்தில் கலந்தது. தற்போது நகராட்சி நிர்வாகம் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் கழிவுநீரை சுத்திகரிக்கிறது. இதனால் அக்னி தீர்த்த கரையில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது.குளிர் சீசனுக்கு கடலில் வளரும் புற்கள் தானாக வெளியேறி அக்னி தீர்த்த கடற்கரையில் ஒதுங்குகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் புனித நீராடும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். நகராட்சி ஊழியர்கள் தினமும் காலையில் கடல் புற்களை அகற்றினாலும், மாலையில் மீண்டும் ஏராளமான புற்கள் கரை ஒதுங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி