உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சதுர்வேத மங்கலம்  கிராமத்தில் வேளாண் நவீனமயமாக்கல் விழிப்புணர்வு கூட்டம்

சதுர்வேத மங்கலம்  கிராமத்தில் வேளாண் நவீனமயமாக்கல் விழிப்புணர்வு கூட்டம்

ராமநாதபுரம்: மாவட்ட வேளாண் விற்பனை, வணிகத்துறை சார்பில் மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ள சதுர்வேத மங்கலத்தில் நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்க திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் கோபால கிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில், இடைத்தரகர் எவருமின்றி இ-நாம் திட்டத்தில் அதிகபட்ச விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்குவது குறித்து பேசினார்.குயவன்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன், நெல்லில் இயந்திர முறையில் வரிசை விதைப்பு, களை மேலாண்மை, பூச்சி, நோய் தடுப்பு குறித்து பேசினார்.வேளாண் வணிக அலுவலர் உலகுசுந்தரம், தோட்டக்கலை உதவி இயக்குநர் அருண்குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் முரளி ஆகியோர் பருத்தி, மிளகாய் இடுபொருட்கள் இருப்பு, அரசின் மானியத்திட்டங்கள் குறித்து பேசினர்.வேளாண்மை உதவி அலுவலர் நிவேதா, முதன்மை செயல் அலுவலர் சுவேதா, விவசாயிகள் பலர் பங்கேற்றனர். வேளாண்மை வணிகதுறை அலுவலர் சபிதா பேகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை