மேலும் செய்திகள்
சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்
11-Jan-2025
முதுகுளத்துார்; முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா துணை தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கணேசன், தாலுகா செயலாளர் அங்குதன் முன்னிலை வகித்தனர். முதுகுளத்துார் பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கவும், மணக்குளம் கிராமத்திற்கு தெருச்சாலை அமைக்கவும், விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ. 3000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். உடன் பொருளாளர் முருகேசன் உட்பட நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
11-Jan-2025