மேலும் செய்திகள்
உழவர் நலத்துறை கலந்தாய்வுக் கூட்டம்
22-Aug-2025
ராமநாதபுரம்: பயிர் சாகுபடியில் இடுபொருட்களை பரிசோதனை செய்து தரமிக்கவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்சா வலியுறுத்தினார். ராமநாதபுரம் அருகே மஞ்சூரில் நடந்த உழவரைத் தேடி வேளாண்- உழவர் நலத்துறை சிறப்பு முகாமில் விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்சா விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து விதைகள் வழங்கி பேசியதாவது: விவசாயத்திற்கு தேவையான முக்கிய இடுபொருட்கள் மண், தண்ணீர் மற்றும் விதையாகும். காலநிலை மாற்றத்தின் தாக்கம் உள்ள இக்காலத்தில் இடுபொருட்களை பரிசோதனை செய்து தரமிக்கவைகளை மட்டும் பயன்படுத்துவது அவசியம். தரமான விதைகள் வாங்குவதற்கு விவசாயிகள் அரசு மற்றும் தனியார்விற்பனையாளர்களிடம் ரசீது கட்டாயம் பெற வேண்டும். பயிர்களுக்கு ஊட்டச்சத்து மேலாண்மை, மனிதர்களுக்கு ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளிடையே விரிவாக எடுத்துரைத்தார். வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
22-Aug-2025