உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நோய் தாக்கிய வாழை மரங்களை ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள்

நோய் தாக்கிய வாழை மரங்களை ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள்

கமுதி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கமுதி வட்டாரத்தில் வாழை மரங்களில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.கமுதி அருகே கிளாமரம், கோரைப்பள்ளம், கீழராமநதி, மேலராமநதி, நீராவி, காவடிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் 200 ஏக்கருக்குமேல் வாழைசாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே குலை நோய் தாக்கம்ஏற்பட்டு ஏராளமான வாழை மரங்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் காரணமாக கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி