உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அ.தி.மு.க., பூத் கமிட்டி பயிற்சி முகாம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி பயிற்சி முகாம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் அ.தி.மு.க., மண்டபம் மேற்கு ஒன்றிய பூத் கமிட்டி பயிற்சி முகாம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடந்தது. மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் வெண்ணிலா பயிற்சி அளித்தார்.அவர் கூறியதாவது: பூத் கமிட்டி நிர்வாகிகள்அக்.,5 முதல் வீடு தோறும் சென்று தி.மு.க., ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் மதிப்பெண்ணை தெரிந்து வர வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் வழங்கப்படும். அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட வேண்டும் என யாரிடமும் கேட்க வேண்டாம். கடந்த 4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் அவர்கள் அனுபவித்த கஷ்டங்களை எடுத்துக் கூறினால் போதும்என்றார்.விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் யூனுஸ் முகமது ஆலோசனை வழங்கினர். இதில் மண்டபம் மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 கிராமங்களை சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ