உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேவர் சிலைக்கு அ.தி.மு.க.,வினர் மரியாதை

தேவர் சிலைக்கு அ.தி.மு.க.,வினர் மரியாதை

கமுதி: கமுதி, முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் உள்ள தேவர் சிலைக்கு அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆத்துார் சட்டசபை தொகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பரப்புரையின் போது முன்னாள் முதல்வர் பழனிச்சாமி சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவோம் என கூறியிருந்தார். தேவர் புகழுக்கு கவுரவம் ஏற்படுத்தும் வகையில் பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலாளருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் உள்ள தேவர் சிலைக்கு மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் கதிரேசன் உட்பட நிர்வாகிகள் பலர் இருந்தனர். கமுதி பஸ் ஸ்டாண்டில் உள்ள தேவர் சிலைக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் காளிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் கருமலையான், வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், அவைத்தலைவர் சேகரன் முன்னிலையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ