ஆகாச முத்து காளியம்மன் கோயில் லட்சார்ச்சனை விழா
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே, திருத்தேர்வளை ஆகாச முத்து காளியம்மன் கோயில், விழா, ஆக.1ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் தொடர்ச்சியாக தினமும் மூலவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகளும், தீபாராதனையும் நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து மூலவருக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முக்கிய விழாவான லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமம், துர்கா ஹோமம் நடைபெற்று, லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. மூலவருக்கு நடைபெற்ற தீபாராதனையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.