கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கீழக்கரை: -கீழக்கரை செய்யது ஹமிதா கலை-அறிவியல் கல்லுாரியின் வெள்ளி விழா ஆண்டின் துவக்க நிகழ்வு கொண்டாடப்பட்டது. 2000ம் ஆண்டில் படித்தவர்கள், தற்போது படிக்கும் மாணவர்கள் வரை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. முகமது சதக் அறக்கட்டளையின் தலைவர் யூசுப் சாகிப் தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குநர்கள் ஹபீப் முகமது, பைசல், அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராஜசேகர் வரவேற்றார். முகமது சதக் அறக்கட்டளை இயக்குநர்கள் சதக் அப்துல் காதர் உட்பட பேராசிரியர்கள் துணைத் தலைவர்கள் பங்கேற்றனர். தாங்கள் பயின்ற கல்லுாரி வகுப்பறைகளுக்கு சென்று முன்னாள் மாணவர்கள் மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.