உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அம்பேத்கர் பிறந்தநாள் விழா..

அம்பேத்கர் பிறந்தநாள் விழா..

பரமக்குடி: பரமக்குடியில் சட்டமேதை அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா நடந்தது.பரமக்குடி எம்.எல்.ஏ., அலுவலகம் முன்பு நடந்த விழாவிற்கு எம்.எல்.ஏ., முருகேசன் தலைமை வகித்தார். அம்பேத்கரின் உருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். நகராட்சி தலைவர் சேது கருணாநிதி முன்னிலை வகித்தார். விழாவில் போகலுார் ஒன்றிய செயலாளர் குணசேகரன், வக்கீல் பூமிநாதன், நகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர். சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்தனர்.* ராமநாதபுரத்தில் வி.சி.க., சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது. இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் நடந்த விழாவிற்கு மண்டல துணைச்செயலாளர் விடுதலைசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் கிழக்கு அற்புதக்குமார், மேற்கு ரமே. பிரபாகரன் முன்னிலை வகித்தனர். திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, மண்டல செயலாளர் மாலின், ஊடக மைய மாநில செயலாளர் சஜன்பராஜ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ