உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் கவனிப்பாரற்ற நிலையில் அம்மா உணவகம்

பரமக்குடியில் கவனிப்பாரற்ற நிலையில் அம்மா உணவகம்

பரமக்குடி: பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இயங்கி வரும் அம்மா உணவகம் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளதால் பயனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் 2015ல் குறைந்த விலையில் மக்களுக்கு உணவு வழங்கும் வகையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது.இதன்படி காலை மற்றும் மதியம் உணவு வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட அம்மா உணவகம் கவனிப்பாரின்றி உள்ளது. மாற்றுத்திறனாளிகள் செல்லும் பாதை சேதமடைந்துள்ளது. மேலும் இங்குள்ள கிரைண்டர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் வீணாகியுள்ளது. மின்விசிறிகள் இயங்காமல் உணவகம் சுத்தமில்லாமல் உள்ளது. கை கழுவும் குழாய்களில் தண்ணீர் வராமல் அருகில் அண்டாவில் ஊற்றி வைத்துள்ளனர். இதனால் பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதும் பாசி படர்ந்துள்ளது. முக்கியமாக உணவுகளும் முறையாக வழங்கப்படாததால் ஒவ்வொரு நாளும் பயனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது. நகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகத்தை முறையாக பராமரித்து ஏழை மக்களின் பசி தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ