மேலும் செய்திகள்
தேய்பிறை அஷ்டமி பூஜை
18-Jul-2025
உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு ஆந்திர மாநில தலைமை நீதிபதி சுவாமி தரிசனம் செய்ய வந்தார். உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு நேற்று ஆந்திர மாநிலத்தின் தலைமை நீதிபதி தீரஜ் சிங் தாகூர் நேற்று காலை தனது மனைவியுடன் உத்தரகோசமங்கை மங்கள நாதர் சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ், கீழக்கரை தாசில்தார் ஜமால் மற்றும் சமஸ்தான நிர்வாகத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன், மரகத நடராஜர் சன்னதி மற்றும் அக்னி தீர்த்தம், மாணிக்கவாசகர் சன்னதி உள்ளிட்டவைகளை தரிசனம் செய்த பின் கோயிலின் ஸ்தல வரலாறு மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து கேட்டு அறிந்து கொண்டார். பின்னர் காரில் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றார்.
18-Jul-2025