அங்கன்வாடி மையம் திறப்பு
கமுதி: கமுதி அருகே கூடக்குளம் கிராமத்தில் பிரதான் மந்திரி கிராம முன்னோடி திட்டம் சார்பில் ரூ.13.57 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. பி.டி.ஓ., சந்திரமோகன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியேந்திரன், பரமசிவம் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலர் ராஜீவ் காந்தி வரவேற்றார்.புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.