உள்ளூர் செய்திகள்

கால்நடை முகாம்

கமுதி: கமுதி அருகே மேல முடிமன்னார் கோட்டை கிராமத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடை டாக்டர் மதி தலைமை வகித்தார். உதவி டாக்டர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார். செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், வெறிநாய்க்கடி தடுப்பூசி, சினை ஊசி உட்பட பல்வேறு பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்தினர். முகாமில் 49 பேர்களின் 1113 கால்நடைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கால்நடை வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினர். உடன் பால்வளத்துறை அதிகாரி மணிமேகலை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க மேற்பார்வையாளர் சங்கீதா, செயலாளர் ராமச்சந்திரன்,கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ராம்ஜி, பாரதி உட்பட பலர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை