உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேக விழா

கடலாடி: கடலாடி அருகே ஏந்தல் கிராமத்தில் உள்ள பொன்னந்தி காளியம்மன் கோயிலில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு 2024 ஜூலை கும்பாபிஷேகம் நடந்தது. ஓராண்டு பூர்த்தியானதை முன்னிட்டு வருடாபிஷேக விழாவில் மூலவர் பொன்னந்தி காளியம்மன், கண்ணாயிர மூர்த்தி, அய்யனார், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. சிவாச்சாரியார்களால் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை