உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பத்திரப்பதிவு லஞ்ச புகார் லஞ்ச ஒழிப்பு விசாரணை

 பத்திரப்பதிவு லஞ்ச புகார் லஞ்ச ஒழிப்பு விசாரணை

திருவாடானை: பத்திரம் பதிவு செய்ய அரசு கட்டணத்தை விட கூடுதலாக பத்திர எழுத்தரிடம் பணியாற்றும் பெண் கேட்டதாக ஆடியோ பரவியதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் விசாரணை நடத்தினர். திருவாடானையில் சில நாட்களுக்கு முன்பு பத்திரப் பதிவு செய்ய ஒரு எழுத்தரிடம் ஒருவர் தொடர்பு கொண்டார். அப்போது அரசு கட்டணத்தை விட ரூ.5000 கூடுதலாக வசூல் செய்யப்பட்டது. பத்திரம் பதிவு செய்தவர் பத்திர எழுத்தரிடம் பணியாற்றும் ஒரு பெண் ஊழியரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு அரசு கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யப்பட்டது குறித்து விளக்கம் கேட்டார். அதற்கு அந்த பெண் ஊழியர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த உரையாடல் குறித்து ஆடியோ பரவியது. சார்பதிவாளர் மாலினி தேவகோட்டைக்கு மாறுதல் செய்யப்பட்டார். நேற்று இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். திருவாடானையில் உள்ள சம்பந்தப்பட்ட பத்திர எழுத்தர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகலத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். விசாரணையின் போது பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் வகையில் அலைபேசி எண்கள் கூகுள்-பே கணக்கு விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறுகையில், ஆவணங்கள் குறித்து முழுமையான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தவறு உறுதி செய்யப்படும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ