பெருநாழியில் காட்சிப்பொருளான ஏ.டி.எம்.,: வாடிக்கையாளர் அவதி
பெருநாழி: பெருநாழியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., செயல்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பெருநாழி நகர் பகுதியில் உள்ள நேதாஜி பஜாரில் எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., இயங்கி வருகிறது. பெருநாழி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் பெருநாழி நகர் பகுதிக்கு பொருட்கள் வாங்கவும், வேலை நிமித்தமாக வருகின்றனர். எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இயங்காமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் பணம் எடுப்பதற்கும், வங்கி கணக்கில் பணம் செலுத்துவதற்கும்வழியில்லாமல் உள்ளது. சாயல்குடி, கமுதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றனர். எனவே வங்கி ஏ.டி.எம்.ஐ., பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.