தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த பிளஸ் 2, பட்டபப்டிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தொழில்நுட்ப பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன்படி தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.இப்பயிற்சியில் சேர்வதற்கு பிளஸ் 2 தேர்ச்சி, தொழிற்பயிற்சி, பட்டய படிப்பு மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.இப்பயிற்சி முடித்தவுடன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பம் உள்ளவர்கள் தாட்கோ இணையதளம் www.tahdco.comமூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.