அறங்காவலர் நியமனம்
திருவாடானை; திருவாடானை பகுதியில் ஹிந்து சமய அற நிலையத்துறை பராமரிப் பில் உள்ள கோயில் களுக்கு அறங்காவலர் நியமனம் நடந்து வருகிறது. இதில் திருவாடானை அருகே மேல்பனையூரில் உள்ள அழகிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு தொண்டி சரவணா ஜூவல்லரி உரிமையாளர் சரவணன் அறங்காவலராக நியமிக்கப்பட்டார். அவருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.