உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செயற்கை நுண்ணறிவு கருவிகள் கருத்தரங்கம்

செயற்கை நுண்ணறிவு கருவிகள் கருத்தரங்கம்

கீழக்கரை : கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் அறிவியல் துறை சார்பில் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கற்றல் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் சுமையா தலைமை வகித்தார். கணிதத் துறை தலைவர் புனிதா வரவேற்றார். டெல்லி குரு கோபிந் சிங் இந்திர பிரசாத் பல்கலையின் விவேகானந்தா இன்ஸ்டியூட் ஆப் புரொபஷனல் தொழில் முனைவுத்துறை பேராசிரியர் மீனாட்சி காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். பன்முக கற்றல் அமைப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் பேசப்பட்டது. மாணவிகளின் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. ஆசிரியர்கள் பாடத்திட்ட வடிவமைப்பு மதிப்பீடு மற்றும் ஏ.ஐ., எனப்படும் புதிய தொழில்நுட்பம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் பொது மேலாளர் சேக் தாவூத் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ