கலைநய பொருட்கள் தயாரிக்கும் முகாம்
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கி கிராமத்தில் வாப்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையல் பயிற்சி, பூ வேலைப்பாடு, சிறுதானிய உணவு தயாரித்தல், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல், துணிப்பை தயாரித்தல், பனை ஓலை பொருட்கள் போன்ற தொழில்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. இந்த பயிற்சியில் பங்கேற்ற பெண்களுக்கு தொழில் முனைவோராக புதிய தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் குறித்த முகாம் நடந்தது.இதில் பங்கேற்ற பெண்களுக்கு மத்திய அரசின் பென்ஷன் ஈஸ்வரம் மற்றும் ஆயுஷ்மான் திட்டத்திலும் இணைந்து வழிகாட்டும் பயிற்சி முகாம் துவங்கியது. விழாவில் சி.எம்.எஸ்., நிறுவனத்தின் மண்டல மேலாளர் செல்வகுமார், கணேஷ்குமார், துணை இயக்குனர் கருசின் பட்டல் பங்கேற்றனர்.மாவட்ட வளர்ச்சி அலுவலர் அருண்குமார், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்று அரசின் திட்டங்களை எடுத்துக் கூறினர். வாப்ஸ் தொண்டு நிறுவனத்தில் செயலர் அருள் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.பெண்கள் தயாரித்த பல்வேறு வகையான பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.