உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்கள் ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்கள் ஏலம்

முதுகுளத்துார்: பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை வேளாண் விளைபொருட்கள் ஏலம் நடைபெறும் என்று ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் மல்லிகா கூறினார். அவர் கூறியதாவது:ராமநாதபுரம் விற்பனைக்குழு கட்டுப்பாட்டில் இயங்கும் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிரதி வாரந்தோறும் புதன் கிழமை மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் மறைமுக ஏலம் நடைபெற உள்ளது.பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் உள்ளூர் அனைத்து மாவட்ட வணிகர்கள் அனைவரும் ஏலத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நல்ல விலைக்கு விளைபொருட்களை எவ்வித தரவு, கமிஷன் இல்லாமல் சரியான எடையில் அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்யலாம்.வியாபாரிகள் தரமான விளை பொருட்களை சரியான விலையில் கொள்முதல் செய்யவும் முடியும். எனவே ஏலத்தில் பரமக்குடி சுற்றுவட்டார விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி