வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்துஅனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலத்துறை ஆணையர் வள்ளலார் தலைமை வகித்தார்.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தார்.நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குகொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கணிப்பாய்வுஅலுவலர் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூடுதல்கலெக்டர் வீர் பிரதாப் சிங், பரமக்குடி சப்கலெக்டர் அபிலாஷா கவுர், அரசுஅலுவலர்கள் பங்கேற்றனர்.