உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிலிண்டர் பயன்படுத்தி மீன் பிடித்த சிறுவன் பலி கண்டுகொள்ளாத அதிகாரிகளுக்கு கண்டனம்

சிலிண்டர் பயன்படுத்தி மீன் பிடித்த சிறுவன் பலி கண்டுகொள்ளாத அதிகாரிகளுக்கு கண்டனம்

ராமநாதபுரம்,: -ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்தி, மீன் பிடிப்பில் ஈடுபட்ட போது சிறுவன் முகிலன், 16, என்பவர் பலியானார். இதுபோன்ற சட்டவிரோத மீன் பிடிப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு கடல் தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.ராமநாதபுரத்தில் கடல் தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலர் கருணாமூர்த்தி தெரிவித்ததாவது:பாம்பன் ஊராட்சி, நாலுபனை கிராமத்தை சேர்ந்த முகிலன், குடும்ப வறுமையால் துாத்துக்குடி மாவட்டம், வேம்பார் பகுதியில் சிலிண்டர் பயன்படுத்தி மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டார். இதில், மூச்சு திணறி உயிரிழந்தார்.இந்த மீன் பிடிப்பு முறை ஆபத்தானது என, நாங்கள் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளோம். வழக்கம் போல் இந்த ஆபத்தான மரணத்தை சிலிண்டர் மீன் பிடிப்பாளர்கள் மறைக்க முற்படுவர். அதற்கு அரசு நிர்வாகங்களும் துணை போகின்றன.இந்த சட்ட விரோத மீன் பிடிப்பு குறித்து, தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும். இம்மீன்பிடிப்பு முறையில், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரின் வறுமையை கருதி, தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் ஆபத்து

சங்கு குளிக்கும் தொழிலாளர்கள், அதற்காக ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்கின்றனர். அதில், ஆறு, ஏழு இணைப்பை ஏற்படுத்தி, நீருக்கு அடியில் எடுத்துச் சென்று, நீண்ட நேரம் தங்கி சங்கு குளிக்கின்றனர். சுவாசத்திற்காக பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் சிலிண்டரில், சில நேரங்களில் குறைவான வாயு இருந்தால், அதை பொருத்தி, மீன் பிடிப்பவர்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. அத்தகைய நேரங்களில், உடனடியாக மேலே வர முடியாமல், மூச்சுத்திணறி இறக்கவும் வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ