மேலும் செய்திகள்
டி.ஐ.ஜி., மாற்றம்
26-Mar-2025
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே வாணியங்குளத்தை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவர், ஏழு நாட்களுக்கு முன், 'பஜாஜ்' நிறுவனத்தின் சி.என்.ஜி., காஸ் ஆட்டோ ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். நேற்று முன்தினம் மதியம் ராமநாதபுரத்தில் உள்ள ஒர்க் ஷாப்பில் சில பராமரிப்பு பணிக்காக ஆட்டோவை கொண்டு வந்தார்.அவர் ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்ற போது, திடீரென தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இந்த வீடியோ பரவி வருகிறது. காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Mar-2025